‘துன்முகியே’ மலர்க! Let DHUNMUKI bloom!(14/4/16)                            

Today is happy Tamil New Year Day to celebrate

Among Tamil years sixty, DHUNMUKI to reverberate.

Here is a poem in Tamil welcoming the same

In Tamil and English one can read with joy-attains fame!

‘’துன்முகி’ ஆண்டே மலர்ந்திடுவாய்

துன்பம னைத்தும் தகர்த்திடுவாய்!

வறுமை விலகச் செய்திடுவாய்

பொறுமை வளரச் செய்திடுவாய்!                (1)

May the year Dhunmuki bloom

And remove all miseries

Let poverty go away

May nice patience grow in all!                            (1)

அரசியல் ஒளிரச் செய்திடுவாய்

அநியாயம் அகன்றிடச் செய்திடுவாய்

லஞ்சம் அஞ்சிடச் செய்திடுவாய்

வஞ்சம் அனைத்தையும் அழித்திடுவாய்!          (2)

May politics become bright

All evils moving away

May corruption gets scared

May narrowness of mind be removed!                         (2)

சூதுஅனைத்தையும் பொசுக்கிடுவாய்

வாதுகள் அனைத்தையும் வதக்கிடுவாய்

தீதுசெய்வோரைத் தீர்த்திடுவாய்

பாதுகாப்பினை வழங்கிடுவாய்!                  (3)

May all petty minds get scorched

May all Evil deeds get smashed

May  evil doers get finished

May the good be well secured!                           (3)

கல்வி பெருகச் செய்திடுவாய்

நல்லோர் உயரச் செய்திடுவாய்

வல்லமை எல்லாம் வழங்கிடுவாய்

பொல்லாமை தனைப் பொசுக்கிடுவாய்!                (4)

Let knowledge grow  sky high

May  the noble men rise tall

Give strength to one and all

Let low mindedness be buried!                                      (4)

வள்ளுவம் ஓங்கச் செய்திடுவாய்

துள்ளுதமிழ் முந்திடச் செய்திடுவாய்

பள்ளிகள் பெருகச் செய்திடுவாய்

வள்ளல்கள் வலிமை வளர்த்திடுவாய்!           (5)

May Valluvam rule the world

May youthful Tamil grow further

May the schools spring up all over

Let the nobles go to strength greater!                        (5)

நல்லவர் ஆட்சியை அமைத்திடுவாய்

வஞ்சகர் ஆட்சியை விரட்டிடுவாய்

பஞ்சம் வராது காத்திடுவாய்

லஞ்சப் பேயினைத் துரத்திடுவாய்!               (6)

Let good government be formed

Worthless governance  be removed

Save the world from poverty

Corrupt society to go!                                   (6)

 

மனிதம் மலர்ந்திட அருள் தருவாய்

மானுடம் தழைத்திட வழி செய்வாய்

நாடகம் ஆடிடும் வஞ்சகரை

ஆடவிடாது அழித்திடுவாய்!                     (7)

Grace us with humanism to flourish

Humanity to prosper

Hypocrites to be shown

Their cruel, nasty  way out!                                (7)

 

 

ஆட்சியில் இருக்கும் அரக்கர்களை

அகற்றிட எமக்குத் துணை புரிவாய்

மாட்சிமை பொருந்திய மக்களையே

ஆட்சியில் அமர்த்திட அருள் புரிவாய்!           (8)

Demons in politics to go

Out of power and pelf

Nobles to take over

To yield the best to Society!                                    (8)

பணத்தால் தேர்தல் வெற்றிபெறும்

கொடுமை அழியத் துணை நிற்பாய்!

பண்பில்லாத தலைவர்களை அழித்திட

”துன்முகியே” நீ துணை செய்வாய்!          (9)

Money and muscle power

To be removed-kindly help

Uncultured in governance

Be transformed in “Dhunmuki”                                (9)

ஏழ்மை அகற்றிடத் துணை புரிவாய்

தாழ்மை தொலைத்திட பலம் தருவாய்

வாழ்வு நன்றாய் அமைந்திடவே – புது

ஆண்டே எமக்கு அருள் புரிவாய்!                     (10)

May poverty find its way out

Give us strength to get rid of

Lowliness and people to

Prosper in the year new!                                          (10)

 

 

 

 

 

Also VISHUK KANI FESTIVAL by the great people of KERALA

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s