நீரெடுத்து வருவதற் கவள்மணி
நித்தி லப்புன் னகைச்சுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தொறும்
வேரே டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்த்தி டச்செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெடுத்த புலையுயிர்ச் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல்போல். (9)
TRANSLITERATION
Neereduththu varuvadhar kavaLmaNi
Niththi lappun nagachchudar veesidap
Poare duththuy varumadhan munselap
Poagum vaeLai yadharkkuth thinandhorum
Vaere duththuch cuthandhira narpayir
Veezththi dachcheydhal vaeNdiya mannartham
Seerduththa pulaiyuyirch chaararkaL
Dhesa bakthar varavinaik kaaththalpoal.
TRANSLATION
Darling damsel with a smiley face
Fetching water lovely with great ease
Led by the Venus-Manmatha guarding
Daily in the battle ground-like spies
Who at the behest of kings petty
Plot and root out branch and plant pretty
Of freedom and liberty-yet wait
For the patriots noble true and tight!
(TO BE CONTINUED)