Tagore’s Geethanjali Poem51

THE KING HAS COME

Pencil Sketch Of Rabindranath Tagore Pencil Sketch. Rabindranath Tagore |  Touchtalent – For

The night darkened. Our day’s works had been done. We thought that the
last guest had arrived for the night and the doors in the village were all
shut. Only some said the king was to come. We laughed and said “No, it
cannot be!.”
It seems there were knocks at the door and we said it was nothing but
the wind. We put out the lamps and lay down to sleep. Only some said,
“it is the messenger!” We laughed and said ” No it must be the wind”.


There came a sound in the dead of the night. We sleepily thought it was
the distant thunder. The earth shook, the walls rocked, and it troubled us
in our sleep. Only some said it was the sound of wheels. We said in a
drowsy murmur, “No, it must be the rumblings of clouds.”
The night was still dark when the drum sounded. The voice came “wake
up! Delay not!” We pressed our hands on our hearts and shuddered with
fear. Some said, “Lo, there is the king’s flag!” we stood up on our feet
and cried. “There is no time for delay”.
The king has come – but where are lights, where are wreaths? Where is
the throne to seat him? Oh, shame! Oh, utter shame! Where is the hall,
the decorations? Someone has said, “Vain is this cry! Greet him with
empty hands; lead him into thy rooms all bare!”
Open the doors let the conch shells be sounded! In the depth of the
night has come the king of our dark, dreary house. The thunder roars in
the sky. The darkness shudders with the lightening. Bring out thy tattered
piece of mat and spread it in the court yard. With the storm has come

of a sudden our king of the fearful night.

In Thamizh TAMIL by Dr. N V Subbaraman, this blogger, Chennai, 9840477552
கீதாஞ்சலியின் 51 ஆம் பாடல்
அரசன் வந்துவிட்டார்

இரவு கருத்தது!
இன்றைய நாள் பணிகள் முடிந்தன!
இரவுக்கான கடைசி விருந்தினர் வந்து விட்டனர்
கிராமத்தின் கதவுகள் மூடப்பட்டு விட்டன!
யாரோ கூறினார்:அரசன் இன்னும் வரவேண்டும் என்று!

நாங்கள் சிரித்தோம்;கூறினோம் “அப்படி இருக்க முடியாது.”.
கதவைத் தட்டும் ஒலி கேட்கிறது.
நாங்கள் சொன்னோம்: ”அது காற்றின் ஒலி”
விளக்கை அணைத்தோம்; உறங்கச் சென்றோம்!
ஒரு சிலர் கூறினர்:”அது ஒரு தூதுவர்.

சிரித்தோம், சொன்னோம்:
”இல்லை; அது காற்றுத்தான்”.
நள்ளிரவில் ஓர் ஒலி!
உறக்கத்தில் நினைத்தோம்
துலைவில் ஓர் இடிமுழக்கம் என.
நிலம் அதிர்ந்தது
சுவர்கள் ஆடின.
இது உறக்கத்தில் எங்களை
தொந்திரவு செய்தது.
சக்கரங்களின் சப்தமென
சந்தேகித்தனர் சிலர்!
உறக்கத்தில் முணுமுணுத்தோம்:
மேகங்களின் உறுமல் என்று!
முரசொலி எழுகையில்
இரவின் இருட்டு தொடர்ந்தது.
உரத்த ஒலி: ”எழுந்திருங்கள்,
தாமதிக்காதீர்கள்”.
நெஞ்சைக் கைகளால் அழுத்திக்கொண்டோம்
அச்சத்தினால் நடுக்கம் கொண்டோம்!
ஒருவர் சொன்னார்:
“அந்தோ, அங்கே அரசனின் கொடி!”
எழுந்தோம்; உரக்கச்

சொன்னோம்.
”தாமதிக்க நேரம் இல்லை”.
அரசன் வந்து விட்டார்.
ஆனால் விளக்குகள் எங்கே?

மாலைகள் எங்கே
அரசருக்கு அளிக்க?
இருக்கை எங்கே?
ஐயோ வெட்கம்; மோசமான வெட்கம்.
மன்றம் எங்கே? அலங்காரங்கள் எங்கே?
யாரோ சொன்னார்: ”இந்த அழுகை பயனற்றது.
வெறுங்கையோடு வரவேற்புக் கொடுங்கள்;
வெறுமையாய்க் கிடக்கும் உங்கள் அறைக்கு
அழைத்துச் செல்லுங்கள்” என.
கதவுகளைத் திறங்கள்;
சங்க நாதம் முழங்கட்டும்!
நடுநிசியில் வந்திருக்கிறார்
இருண்ட துயர் மிகுந்த இந்த இல்லத்தின்
அரசன் வந்து விட்டார்!
வானத்தில் இடிமுழக்கம்!
மின்னலுடன் இருட்டு நடுங்குகிறது.
உங்களது கிழிந்த பாயை எடுத்து வாருங்கள்_
அழகு முற்றத்தில் விரித்து வையுங்கள்!
திடுமெனப் புயலுடன்
அச்சப்படும் அரசன் வந்து விட்டார்!

ஆம் அரசர் வந்துவிட்டார்.அவர்தான் தாகூரின் இறைவன். இறைவனில் இயற்கையையும், இயற்கையில் இறைவனையும் கண்டவரல்லவா இரவீந்திரர்? அந்த இறைவனுக்குப் பூக்களும், மாலைகளும் வேண்டாம். நல்ல மனம், அன்புள்ளம், இறைப்பற்று, இவை போதும். சிம்மாசனம் தேவையில்லை. கிழிந்த பாய் மந்தரையில் இருந்தாலே மகிழ்வோடு அமர்ந்து அருள் புரிபவன் இறைவன். அவன் அருள் பெறுவோம், அமைதியாய் வாழ்வோம்.

rabindronath tagore | designway4u | Bengali art, Modern wall art canvas,  Beauty art drawings
Bengali art.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.