Tagore’s Geethanjali Poem 52

POEM 52

TAGORE'S GITANJALI Poem 29 | Rabindranath tagore, Best poems, Poems in  english

NO MORE WAITING AND WEEPING

I thought I should ask of thee – but I dared not – the rose wreath thou hadst on thy neck. Thus I waited for the morning, when thou didst depart, to find a few fragments on the bed. And like a begger I searched in the dawn only for a stray petal or two. 

Ah me, what is it I find?  What token left of thy love? It is no flower, no spices, no vase of perfumed water. It is thy mighty sword, flashing as a flame, heavy as a bolt of thunder. The young light of morning comes through the window and spread itself upon thy bed. The morning bird twitters and asks, “woman, what hast thou got?” No, it is no flower, nor spices, no vase of perfumed water – it is thy dreadful sword.

I sit and muse in wonder, what gift is this of thine. I can find no place where to hide, it. I am ashamed to wear it, frail as I am, and it hurts me when I press it to my bosom. Yet shall I bear in my heart this honor of the burden of pain, this gift of thine.

From now there shall be no fear left for me in this world, and thou shall be victorious in all my strife. Thou hast left death for my companion and I shall crown him with my life. Thy sword is with me to cut asunder my bonds and there shall be no fear left for me in the world. 

From now I leave all pretty decorations. Lord of my heart, no more shall there be for me waiting and weeping in corners, no more coyness and sweetness of demeanour. Thou hast given me thy sword for adornment. No more doll’s decorations for me!       

கீதாஞ்சலியின் 52ஆவது பாடல்

  இனி காத்திருப்பதுவும் அழுதலும் இல்லை!

உன்னிடம் கேட்க நினைத்தேன்

உனது கழுத்தில் இருக்கும் 

ரோஜா மாலையைப் பற்றி!-

ஆனால் தைரியம் இல்லை!

காலை வரை காத்திருந்தேன்

நீ புறப்பட்டுச் செல்லும் வரை.

படுக்கையில் புதிய 

நறு மணம் கண்டேன்!

விடியற்காலையில்

தேடினேன் ஒரு பிச்சைக்காரனைப் போல

கிடைத்ததோ ஒரு சில இதழ்கள் மட்டுமே! 

ஓ எதை நான் காண்கிறேன்?

உனது அன்பின் அடையாளமாக எது?

மலர் இல்லை, மணம் இல்லை

நறுமணம் மிகுந்த பன்னீர்ச் சொம்பு இல்லை !

உனது வலிமையான வாள்

ஒளியைப்போல பளபளக்கும்

காலைஇளம்வெய்யில் 

சாளரத்தின் ஊடே நுழைந்து

உன் படுக்கயின் மேல் அமர்கிறது!

காலைப் பறவை கிசுகிசுக்கிறது

”பெண்ணே, உனக்கு என்ன கிடைத்தது?

”இல்லை- மலர் இல்லை, மணம் இல்லை

நறுமணம் மிகுந்த பன்னீர்ச் சொம்பு இல்லை !

அது ஒரு பயங்கரமான வாள்.

நான் உட்காருகிறேன்; உட்கார்ந்து

வியந்து கொண்டிருக்கிறேன்.

இது என்ன உன் பரிசு என்று.

அதை ஒளித்து வைக்க இடமில்லை.

இளைத்த உடலைக் கொண்ட நான்

அதை என் நெஞ்சில் 

அணைத்துக் கொள்ள முயன்றால்.

வலிக்கிறது;  எனவே அணிவதற்கு 

வெட்கப்படுகிறேன். இருப்பினும்

அதை என் இதயத்தில் வைத்துக் காப்பேன்;

இது உனது பரிசல்லவா?

என் இதயத்தின் வலிச் சுமையை

மகிழ்வோடு ஏற்பேன்!

இனி இந்த உலகில் 

எனக்கு எவ்வித அச்சமும் இருக்காது!

இனிவரும் பூசல்களில் எல்லாம் 

உனக்குத்தான் வெற்றி!

மரணத்தை எனது நண்பனாக்கினாய்

அவனுக்கு எனது வாழ்வை 

கிரீடமாக்குவேன்!

உனது வாள் எனது பந்தங்களை

எல்லாம் நறுக்கி எரியும்!

இனி இந்த உலகில் 

எனக்கு எவ்வித அச்சமும் இருக்காது!

இதய தெய்வமே! இனி எல்லா 

அழகானஅலங்காரங்களையும்

விட்டுவிடுவேன்!

மூலையில் அமர்ந்து 

காத்திருப்பதுவோ, 

கண்ணீர் விடுவதோ கிடையாது!

நாணமோ, இனிமையோ இனி எனது

நடத்தையில் இருக்காது!

என் அழகிற்கு உன் 

வாளைக் கொடுத்துவிட்டாய்! 

பொம்மையின் அலங்காரம் 

எனக்கு இனி இல்லை!

இறைவன் அன்பிற்கும், அருளிற்கும் எல்லை இல்லை. அது நருமணம் மிகுந்த மலராகவும் இருக்கலாம்; வேதனை தெரும் வலியாகவும் இருக்கலாம். உலகை விட்டுச் செல்ல வேண்டிய இறப்பாகவும் இருக்கலாம். எதுவாயினும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்வதே நமக்கு நல்லது. ஆம் மகிழ்ச்சி, வேதனை, பிறப்பு,இறப்பு, வெற்றி, தோல்வி, நன்மை, தீமை, வாழ்வு, தாழ்வு அனைத்தையும் சீராக ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் விளைவு எப்பொழுதும் அமைதியும் ஆனந்தமும்தான்! நாமும் முயன்றுதான் பார்ப்போமே.

Rabindranath Tagore | Biography, Poems, Short Stories, Nobel Prize, & Facts  | Britannica

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.